மதுரை சித்திரைத் திருவிழா: மருத்துவ முகாம், குடிநீர் வசதிகளை அறிய ‘க்யூஆர் கோடு’ வசதி
மதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேர்த்திருவிழாவின் போது எந்தெந்த இடங்களில் குடிநீர், மருத்துவ முகாம், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன? என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள மாநகராட்சி சார்பில் ‘க்யூஆர் கோடு’ வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேர்த்திருவிழாவின் போது எந்தெந்த இடங்களில் குடிநீர், மருத்துவ முகாம், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை பக்தர்கள் அறிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் ‘க்யூஆர் கோடு’ வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து ஆணையர் சித்ரா கூறியது: “மதுரை சித்திரை திருவிழாவில் நாளை (மே 8) திருக்கல்யாணம், வெள்ளிக்கிழமை (மே 9) தேரோட்டம் நடக்கிறது. இந்த விழாக்களில் பங்கேற்க மதுரைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாக்களை முன்னிட்டு முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் 70 இடங்களிலும் குடிநீர், 80 இடங்களில் நடமாடும் கழிப்பறைகள், 15 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 30 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?