திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இரண்டாம் கால யாக பூஜை!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி இன்று இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி இன்று இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 200 சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
What's Your Reaction?