குயில் ஏன் கூடு கட்டுவதில்லை? | பறப்பதுவே 17

சில பறவைகள் தனித்துவமான கூடுகளை அமைக்கின்றன. சில பறவைகள் கூடுகளையே கட்டுவதில்லை. முட்டை அடைகாக்கப் பட்டால்தான் குஞ்சுகள் வெளிவரும். அதனால் முட்டை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

Apr 30, 2025 - 13:55
 0  2
குயில் ஏன் கூடு கட்டுவதில்லை? | பறப்பதுவே 17

சில பறவைகள் தனித்துவமான கூடுகளை அமைக்கின்றன. சில பறவைகள் கூடுகளையே கட்டுவதில்லை. முட்டை அடைகாக்கப் பட்டால்தான் குஞ்சுகள் வெளிவரும். அதனால் முட்டை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்க வேண்டியது அவசியம். இதற்காகப் பறவை தனது உடல் வெப்பத்தை முட்டையின் மீது செலுத்தி, அடைகாக்கிறது. பெரும்பாலான பறவைகள் இதே முறையைப் பயன்படுத்து கின்றன. Malleefowl எனும் ஆஸ்திரேலியப் பறவை, வித்தியாசமான முறையில் முட்டைகளை அடைகாக்கிறது.

முதலில் ஓர் ஆழமான பள்ளத்தை உருவாக்கி, மட்கக்கூடிய பொருள்களால் நிரப்புகிறது. அதன் மீது முட்டைகளை வைத்து, மண்ணை நிரப்புகிறது. எவ்வளவு மண் நிரப்ப வேண்டும், எவ்வளவு மட்கக்கூடிய பொருள்களைச் சேர்க்க வேண்டும் என்பதை அந்த இடத்தின் தட்பவெப்ப நிலை, தேவையான வெப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாகக் கணிக்கிறது. இதன் மூலம் கூட்டில் எப்போதும் தேவையான வெப்பநிலை நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow