ரஷோமானை நம்புங்கள்! | தேன் மிட்டாய் 47
உங்களையும் ஒரு கதாபாத்திரமாக அது மாற்றுகிறது. நான் உருவாக்கிய நால்வரையும் நீங்கள் நெருங்கிச் சென்று பார்க்கிறீர்கள். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் கவனமாக ஆராய்கிறீர்கள். குறுக்கு விசாரணை செய்கிறீர்கள். விவாதிக் கிறீர்கள்.

“என்ன குரோசாவா, மெய்யாகவே இதுதான் கதையா? இதையா படமாக எடுக்கப் போகிறாய்? இதற்காகவா மாய்ந்து, மாய்ந்து இவ்வளவு காலமாக உழைத்துக் கொண்டிருந்தாய்?” என்றார் முதல் நபர். “ஒரு கதை என்றால் முடிவடைய வேண்டும். இதில் எங்கே இருக்கிறது முடிவு? ஒரே குழப்பமாக இருக்கிறது.
நீ என்னதான் சொல்ல வருகிறாய்?” என்றார் இரண்டாவது நபர். “ஏதாவது வித்தியாசமாகப் பண்ண வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்து வைத்திருக்கிறாயா? இதை எல்லாம் யார் வந்து பார்ப்பார்கள்?” என்றார் மூன்றாவது மனிதர். “உனக்குப் படம் எடுக்க வரவில்லை. நீ ஏன் வேறு ஏதாவது செய்யக் கூடாது?” என்றார் நான்காவது நபர்.
What's Your Reaction?