போட்டித் தேர்வில் வெல்ல உதவும் மூன்று படிகள் | | இதோ வேலை!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு களை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்துகிறது. இந்தத் தேர்வு இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் சேவை, இந்திய வெளியுறவு சேவை உள்ளிட்ட 24 வெவ் வேறு சேவைகளுக்கான ஆள்களைத் தேர்ந் தெடுக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு களை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்துகிறது. இந்தத் தேர்வு இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் சேவை, இந்திய வெளியுறவு சேவை உள்ளிட்ட 24 வெவ் வேறு சேவைகளுக்கான ஆள்களைத் தேர்ந் தெடுக்கிறது. உழைப்பே உயர்வுக்கு வழி என்று சொல்லப்பட்டாலும் கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித் தந்து விடுவதில்லை.
தேர்வில் ‘வெற்றி’ எனும் இலக்கை அடைய மூன்று படிகள் மிகவும் இன்றியமையாதவை. இந்தப் படிகள் அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கு அதிகம் பொருந்தும். அவை: திட்டமிடுதல், செயல்படுத்துதல், சரிபார்த்துத் திருத்திக்கொள்ளுதல். தேர்வாளர்கள் இம்மூன்று படிகளையும் கவனமாகப் பின்தொடர வேண்டியது அவசியம்.
What's Your Reaction?