பால்வள ஆராய்ச்சியில் மறுமலர்ச்சி எப்போது? வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 5
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் இன்று மாடிக் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உயிர்ப்பாதுகாப்புக்கு அடிப்படையான நாட்டின் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.

வேளாண் துறை இந்திய நாட்டின் வளர்ச்சியில் முதுகெலும்பு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் இன்று மாடிக் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உயிர்ப்பாதுகாப்புக்கு அடிப்படையான நாட்டின் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.
உலகளவில் வேளாண் ஆராய்ச்சி: இந்தியாவைப் பொறுத்தவரை முன்னொரு காலத்தில் வேளாண் துறையில் சிறந்து விளங்கியதற்கு எண்ணற்ற சான்றுகள் உண்டு. ஆனால், கால மாற்றத்துக்கேற்ப வேளாண் துறை எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. வேளாண் ஆராய்ச்சிகள், வேளாண் துறை முன்னேற்றத்தில் நாட்டின் பங்கு என்ன என்பது போன்ற விஷயங்களைக் கூர்ந்து கவனித்தால் வளர்ந்த நாடு களுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதே இன்றைய நிதர்சனம்.
What's Your Reaction?