தீட்சிதரின் பெருமை பாடும் ‘பிருந்தமுக்தி’! | முத்துசுவாமி தீட்சிதர் 250
வீணை தனம்மாளின் பாரம்பரியமான இசைக் குடும்பத்தின் வாரிசு, சுஷாந்த் பிரேம். இவர் வீணை தனம்மாளின் பேத்திகளான பிருந்தா, முக்தா சகோதரிகளில், முக்தாவின் கொள்ளுப்பேரன்.

வீணை தனம்மாளின் பாரம்பரியமான இசைக் குடும்பத்தின் வாரிசு, சுஷாந்த் பிரேம். இவர் வீணை தனம்மாளின் பேத்திகளான பிருந்தா, முக்தா சகோதரிகளில், முக்தாவின் கொள்ளுப்பேரன். சுஷாந்த், `பிருந்தமுக்தி' என்னும் யுடியூப் சமூகவலைத்தளத்தில், மிகவும் அரிதான (தியாகராஜ சுவாமிகளின் வாகதீஸ்வரி போன்ற அரிய கீர்த்தனைகளை) நிகழ்வுகளில் ஸ்ரீமதி பிருந்தா - ஸ்ரீமதி முக்தா பாடியிருக்கும் பாடல்களையும் முக்தாம்மா தனியாக பாடியிருக்கும் பாடல்களையும் `மியூஸிக்கலி முக்தாம்மா' என்னும் தலைப்பின்கீழ், அவரின் நினைவைப் போற்றும் வகையில் பதிவேற்றிவருகிறார்.
கர்னாடக இசை உலகில் பிரபலமானவர்களிடத்திலேயே மிகவும் பிரபலமாக விளங்கியவை வீணை தனம்மாளின் வீட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை நடக்கும் கச்சேரிகள். அந்தக் கச்சேரிகளிலும் பிரபலமான பல மேடைகளிலும் முத்துசுவாமி தீட்சிதரின் சாகித்யங்கள் தவறாமல் இடம்பெறும்.
What's Your Reaction?