மண்புழுக்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன? | உயிரினங்களின் மொழி - 26

மண்புழுக்களுக்குக் கண்கள் கிடையாது. ஆனால், ’ஹெஸ்ஸின் ஒளி செல்கள்’ எனப்படும் சிறப்பு ஒளி உணர்வு செல்களைக் கொண்டுள்ளன. இவை புழுவின் முதுகுப்புறத்திலும் பக்கவாட்டிலும் அதிகம் காணப்படுகின்றன. இந்த செல்கள் மூலம் அவற்றால் ஒளியின் திசையையும் தீவிரத்தையும் கண்டறிய முடிகிறது.மண்புழுக்களின் வாய்ப்பகுதியில் ஏராளமான வேதியியல் உணர்வு செல்கள் உள்ளன. இதன் மூலம் உணவு, ஆபத்து போன்றவற்றைக் கண்டறிகின்றன. 

Jul 5, 2025 - 21:25
 0  2
மண்புழுக்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன? | உயிரினங்களின் மொழி - 26

மண்புழுக்கள் மண்ணின் சுகாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் உதவுகின்றன. நீண்ட காலமாக அவை தனித்து வாழும் எளிய உயிரினங்கள் என்று கருதப்பட்டது. ஆனால், ஆய்வுகள் மூலம் அவை ஒன்றை மற்றொன்று தொடர்பு கொள்ளும் திறன் வாய்ந்த உயிரினங்கள் என்பது தெரியவந்துள்ளது. அவை தொடர்பு கொள்ள, தொடுதல் அடிப்படையிலான சமிக்ஞையைப் பயன்படுத்துகின்றன.

மண்புழுக்கள் மென்மையான உடலைக் கொண்ட முதுகெலும்பற்ற விலங்குகள். இவை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தசை மண்டலங்கள் மற்றும் நரம்பு கணுக்கள் இருக்கும். மூக்கு இல்லாத இந்த ஜீவராசிகள் தோல் வழியாக சுவாசிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow