மைனாக்கள் பேசும் காதல் மொழி 

பறவைகளை கவனித்துப்  பார்ப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது கருந்தலை மைனாவினால்தான்.

Jul 29, 2025 - 17:30
 0  4
மைனாக்கள் பேசும் காதல் மொழி 

பறவைகளை கவனித்துப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது கருந்தலை மைனாவினால்தான். திண்டுக்கல்லில் எங்கள் அரிசி ஆலையின் நெல் காயப்போடும் களத்திற்கு அருகில் மறைவாக நின்று, பனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் மென்மையான சூரிய ஒளியில் அவை பேசுவதைக் கவனிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.

சிதறிய நெல் மணிகளிலிருந்து முளைத்த பச்சை பசேலென்று வளர்ந்த நெல் நாற்றுகளின் மெத்தென்ற புல்வெளியில் நான்கு மைனாக்கள் வட்டமாக நின்று அவற்றின் மொழியில் பேசிக்கொண்டிருக்கும். மனிதர்களைப் போல் ஒவ்வொரு மைனாவாக தங்களின் முறை வந்ததும் பேசும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow