‘ஆபரேஷன் மகாதேவ்’ முதல் மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நிறைவு வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 23-28
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்கிற பெயரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜூலை 23: சட்ட மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவரும் ஆளுநரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 23: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலைய லாக் அப் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து வழக்கின் முதல் எதிரியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
What's Your Reaction?