பூமியை விட்டு நிலவு நகர்கிறதா? | வானம் நமக்கொரு போதிமரம் 2
நிலவு ஆண்டுக்குச் சுமார் 3.78 செ.மீ. வேகத்தில் பூமியை விட்டுத் தொலைவுக்குச் செல்கிறது. இந்த உண்மை லேசர் கற்றைத் தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் துல்லியமாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

நிலவு ஆண்டுக்குச் சுமார் 3.78 செ.மீ. வேகத்தில் பூமியை விட்டுத் தொலைவுக்குச் செல்கிறது. இந்த உண்மை லேசர் கற்றைத் தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் துல்லியமாகக் கணக்கிடப் பட்டுள்ளது. 1969இல் நீல் ஆம்ஸ்ட்ராங்கை ஏந்திச் சென்ற அப்பல்லோ விண்கலத்தில், லேசர் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் பகுதி, அங்கேயே தங்கிவிடும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது.
பின்னர் 1970இல் ஏவப்பட்ட லூனா 17 விண்கலத்தில் சென்ற சோவியத் ஒன்றியத்தின் முதல் ரோபாட் வாகனமான ‘லூனோகோட் 1’இலும், இதே போன்ற லேசர் பிரதிபலிப்பான் இருந்தது. இவ்வாறு அப்பல்லோ 14, அப்பல்லோ 15 (1971), லூனா 21 (1973) ஆகிய விண்கலங்களுடன் மொத்தம் ஐந்து பிரதிபலிப்பான்கள் நிலவின் மேற்பரப்பில் வைக்கப்பட்டன. சமீபத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திலும், மார்ச் 2, 2025 அன்று புளூ கோஸ்ட் மிஷன் 1 மூலம் நிலவில் தரையிறங்கிய ‘ஃபயர்ஃபிளை’ விண்கலத்திலும் இத்தகைய பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
What's Your Reaction?