எதற்கும் தலைவணங்காத தலைவன் - சேகுவேரா | கல்லறைக் கதைகள் 16
கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில்கூட மரணத்தை வரவேற்றார் சே. தன்னைக் கொல்ல வந்தவனைப் பார்த்தும், “ஒரு நிமிடம் பொறு. நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னைச் சுடு...” என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.

‘எங்கே அநீதியைக் கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா? அப்படியானால் நீயும் என் நண்பன்தான்’ என்று சொன்னவர் சேகுவேரா. சேகுவேரா அல்லது ‘எல் சே’ எனப் பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டினாவில் பிறந்த கியூபப் புரட்சியாளர். மற்ற புரட்சியாளர்களுக்கும் சேகுவேராவுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மற்ற புரட்சியாளர்கள் அவரவர் சொந்த நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியிருப்பார்கள். ஆனால், ‘சே’வைப் பொறுத்தவரை மற்ற நாடுகளையும் தன் நாட்டைப் போலவே நினைத்து, ஆயுதம் ஏந்திப் போராடியவர்.
குடும்பம் போட்ட விதை: சேகுவேரா 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்புடைய குடும்பமாக இருந்ததால் மிக இள வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவருடைய தந்தையைக் காண, ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசுவாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோஷசம் குறித்த இவரது கருத்துகளுக்கு வழிகாட்டியது.
What's Your Reaction?