திரைப் பார்வை: ரிங்.. ரிங்.. | உன் ஸ்மார்ட் போன் கொடு! நீ யாரென்று சொல்கிறேன்!
தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்த விரும்பாத ஒரு கருப்புப் பெட்டி தான் மனித மனம். இன்றைய நவீன மனிதர்களின் கருப்புப் பெட்டி என்பது அவர்கள் கையிலிருக்கும் ஸ்மார்ட் போன்.

தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்த விரும்பாத ஒரு கருப்புப் பெட்டி தான் மனித மனம். ஆனால், இன்றைய நவீன மனிதர்களின் கருப்புப் பெட்டி என்பது அவர்கள் கையிலிருக்கும் ஸ்மார்ட் போன். அதை அலசி ஆராய்ந்தாலே வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும்.
ஒரு மனிதன் தன்னையொரு திறந்த புத்தகம் என்று வெளியுலகத்துக்குப் பிரகடனப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அவன் தன் மரணத்துக்கு முன்பு வரையிலும் கூட, தன் சுயத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்று கருதுகிற அனைத்து ரகசியங்களையும் மனதின் அடியாழத்தில் புதைத்துவிடுகிறான்(ள்). ஆனால், இந்தக் கருதுகோள் கூட ஸ்மார்ட் போன் என்கிற டிஜிட்டல் கருவி வருகிற வரைதான். இன்று, ‘உன் ஸ்மார்ட் போனைக் கொடு! நீ யாரென்று சொல்கிறேன்!’ என்று சொல்கிற அளவுக்கு தனி மனித ரகசியங்கள் அனைத்தையும் டிஜிட்டல் யுகம் என்பது வேவு பார்த்துத் திருடிக்கொள்வதை அல்லது அம்பலப்படுத்திவிடுவதை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் படம் படம் தான் ‘ரிங்.. ரிங்..’.
What's Your Reaction?