ஈரோடு நாகமலையில் அரியவகை புறா
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள நாகமலைக் குன்றில் இளஞ்சிவப்பு - பழுப்பு நிறத்துடன் சிறகுகளில் அரிதாக வெளிரிய நிற அமைப்பைக் (Partial leucism) பெற்ற தவிட்டுப் புறா (Laughing dove) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள நாகமலைக் குன்றில் இளஞ்சிவப்பு - பழுப்பு நிறத்துடன் சிறகுகளில் அரிதாக வெளிரிய நிற அமைப்பைக் (Partial leucism) பெற்ற தவிட்டுப் புறா (Laughing dove) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தவிட்டு புறாக்களில் பொதுவாக காணப்படும் கருநிற வெளிப்புற இறகுகளுக்கு மாற்றாக, நிறமி (color pigment) அற்ற வெண்ணிற வெளிப்புற இறகுகள் இப்பறவையில் இருப்பதை ஆய்வாளர்கள் புகைப்படங்கள் வாயிலாக உறுதி செய்துள்ளனர்.
நாகமலைக் குன்று அடர்த்தியான மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி, வறண்ட புல்வெளி, நன்னீர் சுனை என பலச் செழிப்பான வாழ்விடங்களை கொண்டுள்ளது. நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 135 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 23 எட்டுக்காலிகள், 17 ஊர்வணங்கள், 10 பாலூட்டிகள், 8 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்வது சூழல் அறிவோம் குழுவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு 35 உள்ளூர் பறவைகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?