நண்டுகள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன?
நண்டுகளுக்கு கையில்லை என்றாலும், ஐந்து ஜோடி கால்கள் உள்ளன. அதில் முதலில் இருக்கும் இரண்டு ஜோடி கால்கள் கத்தரிக்கோல் போல் இருக்கும். இதைக் கவ்விகள் என்று சொல்வதுண்டு. உணவு உண்பதற்கும் , சைகை செய்வதற்கும் நண்டுகள் இதை உபயோகிக்கின்றன. நண்டுகள் தங்கள் கால்களையும் கவ்விகளையும் உரசி ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலியை ’ஸ்ட்ரிடுலேஷன்’ என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். இந்த ஒலி வெட்டுக்கிளி ஒலி எழுப்புவது போல் இருக்கும்.

உயிரினங்களின் மொழி - 27
What's Your Reaction?