காகங்கள் எப்படிப் பேசிக்கொள்கின்றன? | உயிரினங்களின் மொழி - 3
கா… கா..., கா… கா...’ என்பதற்குக் குடும்பத்துக்குள் அல்லது பக்கத்தில் இருக்கும் காகத்திடம், ’இங்கே பார், உணவு இருக்கிறது’ என்பதாக இருக்கலாம். அல்லது அக்கம்பக்கம் இருக்கும் காகங்களிடம், இரை கிடைத்துவிட்டதை அறிவிப்பதாக இருக்கலாம். நடுத்தர அலைவரிசை 150-200 Hz இருந்தால் இப்படி இருக்கும். ’காகாகா… காகாகா…’ என்று நீண்ட, அதே நேரம் ஒரு சிறிய இடைவெளியுடன் இருக்கும். கரகரப்பும் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான ஒலி எச்சரிக்கையாக இருக்கலாம். ’நாய் இருக்கிறது, அல்லது கழுகு வட்டமிடுகிறது’ என்பதுபோல. ’காகாகாகா…’ எனத் தொடர்ந்து உச்சஸ்தாயியில் வரும் ஒலியின் அலைவரி

நாம் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளில் ஒன்று காகம். புத்திசாலியான பறவை. மனிதர்களைப் போலவே சமூக வாழ்க்கை வாழும் இயல்புடையது. ஆண் காகமும் பெண் காகமும் எப்போதும் சேர்ந்தே இருக்கும். உணவைத் தேடுவது முதல் தங்கள் மொழியான, ’கா... கா...’ என்று கரைவதைக் குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுப்பது வரை அனைத்தையும் செய்கின்றன.
’கா... கா… கா...’ என்று காகம் அழைப்பதற்குப் பின் ஏராளமான அர்த்தங்கள் இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காகங்களின் ஒலியைப் பிரித்து, அர்த்தங்களைக் கண்டறிந்துள்ளார்கள்.
What's Your Reaction?