நீல்ஸ் போர் | விஞ்ஞானிகள் - 19

ஹாஃப்னியத்தின் பண்புகளைக் கவனித்து அதன் கட்டமைப்பை உருவாக்கினார் நீல்ஸ் போர். அந்தப் பணிக்காக அவர் பெயரில் அந்தத் தனிமத்திற்கு ’போரியம்’ என்று பெயரிட்டனர்.  அணுவில் அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றுகின்றன. ஒவ்வோர் அணுவும் தனித்துவமான ஆற்றல் நிலைகளைக் கொண்டது. எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட ஆற்றல் மட்டத்திலிருந்து மற்ற ஆற்றல் மட்டங்களுக்குத் தாவுகின்றன போன்ற கருத்துகளை முன்வைத்தார் நீல்ஸ் போர். 1922ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

Jan 28, 2025 - 14:00
 0  3
நீல்ஸ் போர் | விஞ்ஞானிகள் - 19

அணுவியலில் அடிப்படைக் கருத்தாங்களைக் கொடுத்த மிகச் சிறந்த விஞ்ஞானி நீல்ஸ் போர். அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். 1922இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

1885, அக்டோபர் 7 அன்று டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகனில் பிறந்தார் நீல்ஸ் போர். தந்தை எரிக் போர் ஆசிரியர், தாய் எலன் அட்மிராலா.
நீல்ஸ் போர் பள்ளியில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராக இருந்தார். இயற்பியல் பிடிக்கும். குறிப்பாக இயற்பியலுக்கான சமன்பாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர். விளையாட்டு நேரத்திலும் பந்து போடும் கம்பத்தில் சமன்பாடுகளை எழுதிப் பார்ப்பார் நீல்ஸ் போர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow