நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!

தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.

Jan 9, 2025 - 20:05
 0  3
நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!

தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம். இறைவனே இஷ்டமுடன் தோன்றி 64 திருவிளையாடல்கள் புரிந்த தலம். உலகப் புகழ்பெற்ற சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறும் சீர்மிகு நகரம். இத்தகு சிறப்புமிக்க மதுரை மாநகரில் உள்ள கோயில்கள் அனைத்தும் புராணச் சிறப்புமிக்கவை.

மதுரையின் சிறப்புகளில் முக்கியமான அழகர்மலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். மலையும் வளமும், மூலிகை மணமும் நிறைந்த வனப்பகுதி. இங்குதான் மலையடிவாரத்தில் பெருமாள்  சுந்தரராஜனாக கோயில் கொண்டுள்ளார். மலையின் நடுப்பகுதியில் அவர் மருமகன் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடைசி வீடான பழமுதிர்சோலை அமைந்துள்ளது. உச்சியில் புனித நதியான நிறைந்த நூபுர கங்கையும், ராக்காயி அம்மன் கோயிலும் அமைந்துள்ளன. அழகர்கோயில் அடிவாரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த நூபுரகங்கை. இதன் அதிதேவதையாக இருந்து அருள்பாலித்து காக்கிறாள் ராக்காயி அம்மன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow