எலத்தூர் குளத்திற்கு வருகை தந்த கூம்பலகன் பறவைகள்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளம் தமிழ்நாட்டின் அதிக பல்லுயிர்கள் வாழும் சூழலியல் முக்கியம் பெற்ற இடங்களில் ஒன்றாகும்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளம் தமிழ்நாட்டின் அதிக பல்லுயிர்கள் வாழும் சூழலியல் முக்கியம் பெற்ற இடங்களில் ஒன்றாகும்.
மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் நெடுந்தூரம் பயணித்து அரிதாக வலசை வரும் செந்தலைக் கூம்பலகன் (Red headed bunting) மற்றும் கருந்தலைக் கூம்பலகன் (Black headed bunting) பறவைகள் எலத்தூர் குளத்திற்கு வருகை தந்துள்ளன. இப்பறவைகளின் வருகை முதன்முறையாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?