சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளாக பக்தர்கள் பங்கேற்பு

பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Feb 10, 2025 - 14:35
 0  5
சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளாக பக்தர்கள் பங்கேற்பு

கோவை: பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம், பேரூரில், மேலைச்சிதம்பரம் எனப்படும் பட்டீசுவரர் கோயில் உள்ளது. இங்கு பட்டீசுவரர் மற்றும் பச்சை நாயகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரம் பழுது பார்க்கும் புனரமைக்கும் பணி, கோயில் வளாகத்தில் சீரமைப்புப் பணி, வர்ணம் பூசும் பணிகள் உள்ளிட்டடை நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி 49 வேதிகை, 60 குண்டங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow