‘அணிக்காக ரன் சேர்த்ததில் மகிழ்ச்சி’ - ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார்.

Feb 10, 2025 - 13:35
 0  5
‘அணிக்காக ரன் சேர்த்ததில் மகிழ்ச்சி’ - ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா

கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரோஹித் வென்றார்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அது தொடர்பாக இங்கிலாந்து அணியுடனான முதல் ஆட்டத்துக்கு பிறகும் இரண்டாவது ஆட்டத்துக்கு முன்பும் ரோஹித் வசம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow