வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முரு​கன் கோயில்​களில் வைகாசி விசாக திரு​விழா நேற்ற கோலாகல​மாக நடை​பெற்​றது. லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

Jun 10, 2025 - 10:35
 0  4
வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

சென்னை / சிறுவாபுரி: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முரு​கன் கோயில்​களில் வைகாசி விசாக திரு​விழா நேற்ற கோலாகல​மாக நடை​பெற்​றது. லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சிறு​வாபுரி முரு​கன் கோயி​லில் ஆளுநர் ஆர்​.என்.ரவி சுவாமி தரிசனம் செய்​தார். முரு​கப்​பெரு​மான் அவதரித்த வைகாசி விசாக நாளை ஒட்டி பெரும்​பாலான முரு​கன் கோயில்​களில் 10 நாள் வைகாசி விசாகத் திரு​விழா நடை​பெறும்.

அந்​த வகை​யில், இந்த ஆண்டு பல்​வேறு கோயில்​களில் ​விழா நேற்று நடை​பெற்​றது. பல்​வேறு பகு​தி​களில் இருந்து லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கோயிலுக்கு வந்​தனர். அதி​காலை​யில் இருந்து பக்​தர்​கள் புனித நீராடி நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow