ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிய தங்கம்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது.

கோவை: உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.4 ஆயிரம் வரை விலை குறைந்தபோதும் மறுபுறம் உலக சந்தை நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தங்க ஆபரணங்கள் வாங்கவிரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.
What's Your Reaction?