கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு ‘கைகொடுக்கும்’ தேங்காய்ப்பூ உற்பத்தி தொழில்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு 14 ஆயிரத்து 838 ஹெக்டேர் பரப்பளவில் நீண்டகாலம் பலன் தரும் தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: பொதுமக்களிடம் தேங்காய்ப்பூ நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்குத் தேங்காய்ப்பூ உற்பத்தி தொழில் கைகொடுத்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு 14 ஆயிரத்து 838 ஹெக்டேர் பரப்பளவில் நீண்டகாலம் பலன் தரும் தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பெருமளவு போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பண்ணந்தூர், அகரம், அரசம்பட்டி, செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, பாரூர், காவாப்பட்டி, நெடுங்கல், வீரமலை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.
What's Your Reaction?