இப்பிறவி பாவங்களை இப்பிறவியிலேயே தீர்க்கும் ‘இம்மையில் நன்மை தருவார்’

இப்பிறவியில் செய்த பாவங்களை போக்கி நன்மை அளிக்கிறார், இம்மையில் நன்மை தருவார். மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் மண் (பிருத்வி) தலம் இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும்.

Dec 31, 2024 - 19:00
 0  4
இப்பிறவி பாவங்களை இப்பிறவியிலேயே தீர்க்கும் ‘இம்மையில் நன்மை தருவார்’

இப்பிறவியில் செய்த பாவங்களை போக்கி நன்மை அளிக்கிறார், இம்மையில் நன்மை தருவார். மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் மண் (பிருத்வி) தலம் இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ந்ததும், அதன் திருக்கண் மண்டபமாகவும் இக்கோயில் விளங்குகிறது. எல்லா கோயில்களுக்கும் சித்தர்களே ஆதாரம். அதேபோல், இந்த கோயிலிலும் வல்லப சித்தரே ஆதாரமாக இருக்கிறார்.

பிரம்மனும், திருமாலும், சக்தியும், தேவர்களும் சிவனை பூஜித்து நலம் பெற்றிருப்பதை புராணங்கள் சொல்கின்றன. ஆனால், சிவனே, சிவமாகிய லிங்கத்தை வழிபட்ட பெருமையுடைய தலம் இது. இத்தலத்தில் சிவன் தன்னையே இங்கு லிங்கமாக பிரதிஷ்டை செய்து, அதை தானே வழிபட்டதாக புராணம் உள்ளது. இவரை வணங்கினால் இப்பிறப்பில் நாம் செய்த பாவமெல்லாம் நீக்கி, முக்தி எனும் சுகத்தை இந்த பிறவியிலேயே அளிக்கிறார். அதனால்தான் ‘இம்மையிலும் நன்மை தருவார்’ என அழைக்கப்படுகிறார். இங்கு மூலவராக உள்ள லிங்கத்தின் பின்னால் சிவனே அம்மனுடன் சிவபூஜை செய்வதுபோல் உருவ அமைப்பு உள்ளது தனிச்சிறப்பு. இங்கு, நடுவூர் நாயகி என்ற பெயரில் மத்தியபுரி அம்மனும் அருள்பாலிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow