சிங்கத்தின் கர்ஜனைக்கு என்ன அர்த்தம்?

கர்ஜனைதான் சிங்கத்தின் முக்கியமான தொடர்பு முறை. ஒரு சிங்கம் கர்ஜித்தால் சுமார் 8 கி.மீ. தூரம் வரை கேட்கும். ஒவ்வொரு கர்ஜனைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் உள்ளது. தங்கள் இருப்பிடத்தை அறிவிக்கக் கர்ஜிப்பது வேறு,  எல்லைகளை வரையறுக்கக் கர்ஜிப்பது வேறு. அது போலவே தூரத்தில் உள்ள மற்ற சிங்கங்களுக்குத் தகவல் தெரிவிக்கவும், மற்ற விலங்குகளை அச்சுறுத்தவும் கர்ஜிக்கும். 

May 23, 2025 - 13:50
 0  1
சிங்கத்தின் கர்ஜனைக்கு என்ன அர்த்தம்?

உயிரினங்களின் மொழி- 20

ஆப்ரிக்க, இந்தியக் காடுகளில் வாழும் பெரிய பூனை இனங்களில் ஒன்றான சிங்கங்கள் கூட்டமாக வாழ்கின்றன. ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ள உடல் அசைவுகள், ஒலிகள், வாசனைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow