கிளைமாக்ஸ் பட்ஜெட் மட்டுமே 25 கோடி!

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக, அரசியலிலும் தனது சக்தியைக் காட்டியிருப்பவர் ‘பவர் ஸ்டார்’ என்று அவருடைய ரசிகர்களால் அழைக்கப்படும் பவன் கல்யாண். அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் ‘ஹரி ஹர வீர மல்லு’.

May 23, 2025 - 13:50
 0  4
கிளைமாக்ஸ் பட்ஜெட் மட்டுமே 25 கோடி!

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக, அரசியலிலும் தனது சக்தியைக் காட்டியிருப்பவர் ‘பவர் ஸ்டார்’ என்று அவருடைய ரசிகர்களால் அழைக்கப்படும் பவன் கல்யாண். அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அவருடைய மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பன்மொழித் திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘அசுர கானம்’ ஹைதராபாத்தில் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பதிப்புக் கான பாடலை எழுதியிருப்பவர் பா.விஜய். இப்படத்தில் நாசர், சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் படத்தின் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா நம்மிடம் பிரத்யேகமாகப் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow