‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ படம் எப்படி? - வாசிப்பு நிகழ்த்தும் சாகசம்!

சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி வெளிப்படையாக விட்டுச் செல்லும் தடயங்களை வைத்துக்கூட அவனை/ளை நெருங்க முடியாமல் துப்பறிவாளனாக வரும் நாயகன் அல்லாடுவான்.

Aug 3, 2025 - 10:40
 0  3
‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ படம் எப்படி? - வாசிப்பு நிகழ்த்தும் சாகசம்!

சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி வெளிப்படையாக விட்டுச் செல்லும் தடயங்களை வைத்துக்கூட அவனை/ளை நெருங்க முடியாமல் துப்பறிவாளனாக வரும் நாயகன் அல்லாடுவான். இந்தப் படத்தில் ஒரே மாதிரியான தொடர் கொலைகளைச் செய்யும் கில்லர், வேண்டுமென்றே விட்டுச்செல்லும் தடயங்களைப் புறம் தள்ளிவிட்டு, நாயகன் தனக்கேயுரிய ‘க்ரைம் நாவல்’ வாசிப்பனுபவம் தந்த அறிவைப் பயன்படுத்திக் கண்டறியும் விஷயங்களுக்காகக் காவல் துறையின் பாராட்டைப் பெறுகிறான்.

மதுரையிலிருந்து பொழுதுபோக்கு க்ரைம் நாவல்கள் எழுதிப் புகழ்பெற்ற ஒரு நாவலாசிரியரின் மகன் பிரபு (வெற்றி). அவருடைய அப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் தொடர் ஒன்றை வெளியிட விரும்பும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கு உதவுவதற்காக சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில், எதிர்பாராதவிதமாகக் காவல் ஆய்வாளரான ராமையாவுக்கு (தம்பி ராமையா) ஒரு கொலை வழக்கில், விசாரணை அடுத்தக் கட்டம் நோக்கி நகர உதவுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow