இந்தியா டூ சிங்கப்பூர்: சுவைமிகு பயணம் | சிங்கா 60
சமையலின் அரிச்சுவடிகூடத் தெரி யாமல் இருந்த சௌமியா இன்று சிங்கப்பூரின் சிறந்த சமையல் கலை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் வெற்றிப் பயணம், நம் மனதுக்குப் பிடித்த உணவைப் போல அவ்வளவு ருசிக்கிறது.

சமையலின் அரிச்சுவடிகூடத் தெரி யாமல் இருந்த சௌமியா இன்று சிங்கப்பூரின் சிறந்த சமையல் கலை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் வெற்றிப் பயணம், நம் மனதுக்குப் பிடித்த உணவைப் போல அவ்வளவு ருசிக்கிறது. ‘மாஸ்டர்செஃப் சிங்கப்பூர்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளார்களில் ஒருவராகத் தேர்வான இவர், பாரம்பரியமும் புதுமையும் இணைந்த உணவு வகைகளைச் சமைப் பதில் கைதேர்ந்தவர்.
பெங்களூருவில் பிறந்து பெற்றோரின் பணி நிமித்தம் டெல்லியில் வளர்ந்தவர் சௌமியா வெங்கடேசன். ராஜன் பிரபுவை மணந்துகொண்டு சென்னை மருமகளானவர், சில ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் குடியேறினார். அங்கே இவருக்கு ஐ.பி.எம். நிறுவனத்தில் வேலை. கணவர் வங்கிகளுக்கான தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். 20 வயதாகும் மகன், சிங்கப்பூர் ராணுவச் சேவையில் இணைந்திருக்கிறார். திருமணத்துக்கு முன்பு வரை சாப்பிடுவது மட்டும்தான் சமைய லறைக்கும் தனக்குமான தொடர்பாக இருந்தது எனச் சிரித்தபடி சொல்கிறார் சௌமியா.
What's Your Reaction?