ஜெகதீஷ் சந்திர போஸ் | விஞ்ஞானிகள் - 15
இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்று கருதிய ஆங்கிலேய அரசு, அதே வேலை செய்த ஆங்கிலேயர்களுக்கு அளித்த சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தையே போஸுக்குக் கொடுக்க முன்வந்தது. தன்மானத்தை விட்டுக் கொடுக்காத போஸ், தனக்குச் சம்பளமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 3 ஆண்டுகள் சம்பளம் இன்றி சிறப்பாக வேலை செய்தார். அவர் திறமையைப் பார்த்த கல்லூரி நிர்வாகம், ஆங்கிலேயருக்கு நிகரான முழு ஊதியத்தைத் தர முன்வந்தது. அதோடு மூன்று ஆண்டுகள் அவருக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தையும் அளித்தது.

தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை நிரூபித்ததன் மூலம் அறிவியல்ரீதியாக உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் ஜெகதீஷ் சந்திர போஸ்.
1858 நவம்பர் 30 அன்று இன்றைய வங்கதேசத்தில் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே போஸ் எதையும் கூர்மையாக உற்று நோக்குவார். ஏன், எதற்கு, எப்படி என்று எதையும் கேள்வி கேட்டு, தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார். போஸின் தந்தை மருத்துவர் என்பதால் போஸின் ஆர்வத்தை ஊக்குவித்தார்.
What's Your Reaction?