ஜெய்ஸ்வாலுக்கு ‘மோசடி’ தீர்ப்பு, தேவையற்ற அவுட்கள் - ஆஸி.யிடம் இந்திய அணி வீழ்ந்தது எப்படி?
இந்திய அணி 121/3 என்று இருந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஷாட்டினால் இந்திய அணி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, பின்னர் 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்குச் சுருண்டு 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டி பரபரப்பான முறையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் இன்று ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்தது. இந்திய அணி 121/3 என்று இருந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஷாட்டினால் இந்திய அணி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, பின்னர் 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்குச் சுருண்டு 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்று முன்னிலை பெற்றது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் ஓர் அதியற்புதமான இன்னிங்ஸை ஆடி போட்டியை டிராவுக்கு நகர்த்திச் சென்று கொண்டிருக்கும்போது கமின்ஸின் ஓசி பந்தைப் போய் ஹூக் ஷாட் ஆடப்போய் லெக் திசையில் கேட்ச் ஆனார். ஆனால், இந்த அவுட் கடுமையான சர்ச்சைகளைக் கிளப்பக் கூடியது. இதுபோன்ற மோசடி தீர்ப்புகள் போட்டியையே ஆஸ்திரேலியா பக்கம் திருப்பிவிட்டதால் இந்தத் தீர்ப்பை நிச்சயம் ரசிகர்கள் எதிர்க்கவே செய்வார்கள்.
What's Your Reaction?