அதியமானும் அதிசய எண்களும் | கதை

வங்கி ஊழியரான அதியமானின் அம்மாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி இருந்தது. எனவே அந்தப் புதிய ஊரில் உள்ள ஒரு பள்ளியில் அவன் சேர்க்கப்பட்டான். முதல் இரண்டு நாள்கள் புதிய சூழல், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் என்று சுவாரசியமாகவே இருந்தது.

Jun 25, 2025 - 12:55
 0  3
அதியமானும் அதிசய எண்களும் | கதை

வங்கி ஊழியரான அதியமானின் அம்மாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி இருந்தது. எனவே அந்தப் புதிய ஊரில் உள்ள ஒரு பள்ளியில் அவன் சேர்க்கப்பட்டான். முதல் இரண்டு நாள்கள் புதிய சூழல், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் என்று சுவாரசியமாகவே இருந்தது. மூன்றாவது நாள் மாலை பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அதியமானுக்குக் கணிதம் என்றால் மிகவும் பிடிக்கும்.

அந்தப் பள்ளியில் கணித ஆசிரியர் கதிரையும் அவனுக்குப் பிடித்திருந்தது. அவர் மூலம் அங்கே ஒரு கணித மன்றம் இருப்பதையும் அறிந்து கொண்டான். அம்மா இன்றும் தாமதமாக வருவாரா என்று யோசித்துக்கொண்டே நடந்த அதியமான் திடீரென்று, காலில் ஒரு கல் இடறுவதை உணர்ந்தான். அழகாகச் செங்கற்கள் வரிசையாகப் பதிக்கப்பட்ட, பள்ளிக்கூடத்திற்கும் வாயிலுக்கும் இடையிலான பகுதி அது. முதலில் கவனிக்காமல் நடந்தான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow