வீர தீர சூர ராணி மச்லி! | வரலாறு முக்கியம் மக்களே! - 04

‘மச்லிக்குப் பற்கள் எல்லாம் கொட்டிவிட்டன. அதனால் சாப்பிட முடியவில்லை. அதனை ஏதாவது உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்துப் பராமரிக்கலாம்’ என்று அந்தப் புலியின் மீது கொண்ட  அன்பால் சிலர் சொன்னார்கள்.

Jun 25, 2025 - 12:55
 0  4
வீர தீர சூர ராணி மச்லி! | வரலாறு முக்கியம் மக்களே! - 04

‘மச்லிக்குப் பற்கள் எல்லாம் கொட்டிவிட்டன. அதனால் சாப்பிட முடியவில்லை. அதனை ஏதாவது உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்துப் பராமரிக்கலாம்’ என்று அந்தப் புலியின் மீது கொண்ட அன்பால் சிலர் சொன்னார்கள். ‘வனத்தின் ராணியாக வாழ்ந்த புலியை உயிரியல் பூங்காவுக்கு அனுப்புவது எல்லாம் அதை அவமானப்படுத்தும் செயல்’ என்று இன்னும் சிலர் அதே அன்புடனும் பரிவுடனும் அந்த யோசனையை மறுத்தார்கள். ‘மச்லி, ரந்தம்பூர் தேசியப் பூங்காவின் கம்பீரமான அடையாளம். அது அங்கேயேதான் கடைசி மூச்சுவரை இருக்க வேண்டும்’ என்று சில வனவிலங்கு ஆர்வலர்கள் அழுத்தமாகக் குரல் கொடுத்தார்கள்.

ஏனெனில் ரந்தம்பூருக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் புகழையும் பணத்தையும் சம்பாதித்துக் கொடுத்தவள் அவள். அன்றைக்கு உலகின் வயதான புலி, மச்லி! 1996ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் பிறந்தது அந்த வங்கப் பெண் புலிக்குட்டி. அதன் முகத்தில் மீன் போன்ற சின்னம் இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow