மருத்துவ சிகிச்சைக்காக கோவைக்கு ‘பறந்து’ வரும் வெளிநாட்டினர்!

இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டில் 1.83 லட்சமாக இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.35 லட்சமாக உயர்ந்துள்ளது.

Nov 11, 2024 - 15:48
 0  3
மருத்துவ சிகிச்சைக்காக கோவைக்கு ‘பறந்து’ வரும் வெளிநாட்டினர்!

கோவை: 2020-21 - ம் ஆண்டுக்கான மருத்துவ சுற்றுலா குறியீட்டில் உலகளவில் இந்தியா 10-வது இடத்திலும், ஆசிய அளவில் முதல் 5 இடங்களிலும் உள்ளது. இந்தியாவில் 55 ஜெ.சி.ஐ. உலக தர சான்றிதழ் பெற்ற மருத்துவமனைகளும், 1600-க்கும் அதிகமான தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ் பெற்ற மருத்துவமனைகளும் உள்ளன.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டில் 1.83 லட்சமாக இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வரும் 2026-ல் மருத்துவ சுற்றுலா வர்த்தகம் 13 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow