வளர்ந்து வரும் ஊட்டச்சத்து அறிவியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 20

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எத்தகைய உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைக் கற்றுத்தருவதற்காக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மருத்துவமனைகளில் சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

Sep 10, 2025 - 12:55
 0  3
வளர்ந்து வரும் ஊட்டச்சத்து அறிவியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 20

இந்த அவசர உலகில் `டயட்’ என்கிற சொல் பிரபலமாகிவருகிறது. உடல் நலமாக இருப்பதற்கு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியம். சத்தான உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நிலையைப் பேணுவதற்கும் நோய்வாய்ப்பட்ட சூழ்நிலையில் எத்தகைய உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கும் டயட்டீஷியன்களும் நியூட்ரிஷனிஸ்டுகளும் தேவைப்படுகிறார்கள்.

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எத்தகைய உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைக் கற்றுத்தருவதற்காக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மருத்துவமனைகளில் சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் டயட்டீஷியன்களும் நியூட்ரிஷனிஸ்டுகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow