பெரிய இறக்கையும் சிறிய இறக்கையும் | பறப்பதுவே 09
திறந்தவெளிகளில் மட்டும்தான் இவற்றால் பறக்க இயலும். அடர்ந்த காடுகள், வளைந்து நெளிந்து பறக்க வேண்டிய இடங்களில், பெரிய இறக்கைகளைக் கொண்டு இவற்றால் பறக்க இயலாது.

ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பது போல், இறக்கைகளின் நீளம் பறவைகளுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கிறது. நீண்ட இறக்கை உடைய பறவைகள் குறைந்த ஆற்றலைச் செலவிட்டு, காற்றின் உதவியுடன் பறக்கும் திறன் வாய்ந்தவை. திறந்தவெளிகளில் மட்டும்தான் இவற்றால் பறக்க இயலும். அடர்ந்த காடுகள், வளைந்து நெளிந்து பறக்க வேண்டிய இடங்களில், பெரிய இறக்கைகளைக் கொண்டு இவற்றால் பறக்க இயலாது.
நீளம் அதிகமாக இருப்பதால் தூக்கும் திறன் அதிகமாக இருக்கும். அதனால் அதிக எடை கொண்ட இரையைத் தூக்கிக்கொண்டு எளிதாகப் பறக்க முடியும். தொலை தூரம் செல்வதற்கு இவை உதவியாக இருக்கும். காற்றின் உதவியுடன் இவை பறப்பதால், காற்று வீசாதபோது, வெப்பநிலை வேறுபாட்டால் காற்று உயராதபோது, இந்தப் பறவைகளுக்குப் பறப்பது சவாலாக மாறிவிடுகிறது.
What's Your Reaction?