‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் கோவை: தமிழக அளவில் 2-ம் இடம்!
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற் படுத்தி புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கி அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை முனைப்புடன் செயல்படுகிறது.

கோவை: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையான சிந்தனை கொண்ட வணிக யுக்தியை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படும் தொழில்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் 6 சதவீதத்தை கொண்ட தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2-ம் இடத்திலும், உற்பத்தி ஏற்றுமதியில் 3-வது பெரிய மாநிலமாகவும் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கி அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை முனைப்புடன் செயல்படுகிறது. இத்துறைக்கு அடித்தளமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
What's Your Reaction?