ஸ்விஸ் எனும் சொர்க்கம் 17: பயன் தரும் ‘மானியத் தொகை’

வேலையில் இருந்தபோது கடைசி மூன்று மாதங்களில் நீங்கள் பெற்ற ஊதியத்தின் சராசரித் தொகையில் 70 சதவீதத்தை உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கும்.

Nov 11, 2024 - 15:48
 0  16
ஸ்விஸ் எனும் சொர்க்கம் 17: பயன் தரும் ‘மானியத் தொகை’

பெர்ன் நகரில் அது கரடிக்குழி என்று அழைக்கப்பட்டாலும் அதைக் கரடிப் பூங்கா என்றும் கூறலாம். பசுமையான பகுதியில் காணப்பட்ட அந்த மூன்று ‘புஷ்டியான’ கரடிகளும் வேகமாக நடந்தபோது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. அங்கு இருந்த நீர்நிலைகளில் அவை குளிப்பதும் தூங்குவதும்கூட அழகாக இருந்தன.

காய்கறிகளும் கனிகளும்தான் அந்தக் கரடிகளின் முக்கிய உணவு. கூடவே குறைந்த அளவில் இறைச்சி, மீன்கள் உண்பதும் உண்டு. முந்திரியும் பாதாமும் தினசரி உணவில் சேர்க்கப்படுகின்றன. கான்க்ரீட் தளத்தில் மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கரடிகளின் நடமாட்டத்துக்கு உகந்த வகையில் புல் வளர்வதற்கானச் சூழலும் உண்டாக்கப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் விலங்கியல் துறைதான் இந்தப் பூங்காவை மேற்பார்வை இடுகிறது. காலை எட்டு மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை இந்தக் கரடிகளைக் கண்டு ரசிக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow