உடல் கவசம் | பறப்பதுவே 05
இறகுகள் பறவையின் உடலில் தோன்றும் புரதப் பொருள்களால் உருவானவை. நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவைதான் இறக்கைகள். குறைந்தது ஆயிரம் இறகுகள் முதல் 25 ஆயிரம் இறகுகள் வரை உள்ள பறவைகள் இருக்கின்றன.

இறகுகள் பறவையின் உடலில் தோன்றும் புரதப் பொருள்களால் உருவானவை. நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவைதான் இறக்கைகள். குறைந்தது ஆயிரம் இறகுகள் முதல் 25 ஆயிரம் இறகுகள் வரை உள்ள பறவைகள் இருக்கின்றன. வானம்பாடிக்கு 1,500 இறகுகளும், கழுகுக்கு 5-8 ஆயிரம் இறகுகளும், வாத்துக்கு 12 ஆயிரம் இறகுகளும், அன்னப் பறவைக்கு 25 ஆயிரம் இறகுகளும் உள்ளன.
பறவைகளின் இறக்கையைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்தால், பறவையின் தலைப் பகுதியில் உள்ள இறக்கை தடிமனாகவும், வால் பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல கூர்மையாகவும் இருக்கும். இது பறப்பதற்கு ஏதுவான காற்றிதழ் வடிவத்தை உருவாக்க உதவுகிறது.
What's Your Reaction?