ஆராய்ச்சியாளர் சுந்தரி! | கதை

சுந்தரிக்குப் பூச்சிகளைப் பிடித்து, அவற்றைப் பக்கத்தில் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அதற்கு அவள் பக்கத்து வீட்டு மஞ்சு அக்காதான் காரணம். மஞ்சு படிக்கும் கல்லூரியில் பட்டுப்பூச்சி  வளர்க்கும்  இடம்  உண்டு.

Jan 22, 2025 - 13:50
 0  3
ஆராய்ச்சியாளர் சுந்தரி! | கதை

சுந்தரிக்குப் பூச்சிகளைப் பிடித்து, அவற்றைப் பக்கத்தில் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அதற்கு அவள் பக்கத்து வீட்டு மஞ்சு அக்காதான் காரணம். மஞ்சு படிக்கும் கல்லூரியில் பட்டுப்பூச்சி வளர்க்கும் இடம் உண்டு. போன வாரம் அந்தப் பூச்சிகளை வீடியோ எடுத்திருந்தார். அதைச் சுந்தரியிடம் காட்டினார். அதில் ஏராளமான பட்டுப்புழுக்கள் இருந்தன. ஒவ்வொன்றும் மல்பெரி இலைகளை வேக வேகமாகச் சாப்பிட்டன.

"எவ்வளவு வேகமா சாப்பிடுது!" என்று ஆச்சரியப்பட்டாள் சுந்தரி. இப்படித்தான் புழு, பூச்சிகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவளுக்கு வந்தது. பூச்சிகளைப் பிடித்து, பாட்டிலுக்குள் சிறிது நேரம் வைத்திருந்து, ஆராய்ச்சி செய்துவிட்டு வெளியே விட்டுவிடுவாள் சுந்தரி. முதலில் பூச்சிகளைப் பிடிக்க அவளுக்குப் பயமாக இருந்தது. முதல் நாள் அம்மாவைத்தான் உதவிக்குக் கூப்பிட்டாள். அவள் கேட்டது ஒரு தும்பியை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow