நறுவீ - அதிர வைக்கும் குருதட்சிணை | திரைப் பார்வை
கடந்த 2019இல் ஜோதிகா நடிப்பில், கௌதம் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ராட்சசி’, அரசுப் பள்ளிகளையும் அதன் ஆசிரியர்களையும், தற்காலக் கல்விச் சூழ்நிலையுடன் பொருத்திப் பெருமைப்படுத்திய படம்.

கடந்த 2019இல் ஜோதிகா நடிப்பில், கௌதம் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ராட்சசி’, அரசுப் பள்ளிகளையும் அதன் ஆசிரியர்களையும், தற்காலக் கல்விச் சூழ்நிலையுடன் பொருத்திப் பெருமைப்படுத்திய படம். ‘நறுவீ’யோ, அர்ப்பணிப்பு மிகுந்த ஓர் அரசுப் பள்ளி ஆசிரியருக்குத் தந்துவிடக் கூடாத குருதட்சிணையை ஓர் அசலான கதைக் களத்தின் பின்னணியில் ஹாரர் த்ரில்லராக, மெல்லிய நகைச்சுவையையும் தொட்டுகொண்டுச் சித்தரித்துள்ளது.
சாலைகளே இல்லாத ஒற்றையடிப் பாதைகளைக் கொண்ட பல மலைக் கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகள் உண்டு. அப்படியொரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து கல்விப் பணியாற்றச் சேவை மனப்பான்மை கொண்ட ஒருவரால்தான் முடியும். அதைச் செய்கிறார் ஹரீஷ் என்கிற இளம் ஆசிரியர். நீலகிரியின் குன்னூர் மலைக்கு மேலே சாலை ஏதுமற்ற ஒரு கிராமத்தில் இருக்கும் ஓராசிரியர் பள்ளி அது.
What's Your Reaction?