நாம் வாழும் உலகங்கள் | தேன் மிட்டாய் 27
மொத்தம் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. நானும் நீங்களும் மற்றவர்களும் சூரியனும் சந்திரனும் காடும் மலையும் மீனும் முயலும் இன்னபிற உயிர்களும் வாழும் உலகம். மற்றொன்று மாய உலகம். நாம் வாழும் உலகம் நிஜமானது.

மொத்தம் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. நானும் நீங்களும் மற்றவர்களும் சூரியனும் சந்திரனும் காடும் மலையும் மீனும் முயலும் இன்னபிற உயிர்களும் வாழும் உலகம். மற்றொன்று மாய உலகம். நாம் வாழும் உலகம் நிஜமானது. ஏனென்றால் அதை நாம் காண முடியும், உணர முடியும். மாய உலகம் என்பது நம் கற்பனையில் தோன்றுவது. நம் கற்பனையில் மட்டும் உயிர் வாழ்வது. அதைக் காணவோ உணரவோ முடியாது. எனவே, அது பொய்யான உலகம். எனக்குத் தெரிந்து பலரும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.
மார்க்வெஸ், நீங்கள் எழுதும் கதைகள் எல்லாம் வித்தியாசமாக இருப்பதற்கு என்ன காரணம்? உங்கள் கதைகளில் வரும் மனிதர்கள், அவர்கள் வாழும் இடம், அங்கே நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே புதிதாக இருக்கின்றன. ஒரு புதிய உலகை எப்படி உங்களால் படைக்க முடிகிறது? ஒரு புதிய நடையில் எப்படி உங்களால் எழுத முடிகிறது? என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் இந்தக் கேள்விக்கான விடை என் எழுத்திலேயே இருக்கிறது.
What's Your Reaction?