சடலத்தோடு புதைக்கப்பட்ட உண்மைகள் - ருடால்ஃப் ஹெஸ் | கல்லறைக் கதைகள் 20
ஹெஸ் என்கிற பெயரில் சிறையில் தண்டனை அனுபவித்து இறந்துபோன நபர் போலியானவர் என்றும் அசலான மனிதரை எப்போதோ கொன்றுவிட்டார்களென்றும் சொல்கிறார்கள். ஹெஸ் எனக் கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கப்பட்டவர் அசலா போலியா? அவர் இறப்பு தற்கொலையா? கொலையா?

ஹாமில்டனும் கிர்க் பட்றிக்கும் ஹெஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்கள். அந்த ஜெர்மானியர் ஹெஸ்தான் என்று மேலிடத்துக்குத் தகவல் கொடுத்தார் கிர்க் பட்றிக்.
கிர்க் பட்றிக்கும் ருடால்ஃப் ஹெஸ்ஸும் அடுத்தடுத்துச் சந்தித்துப் பேசினர். “போரினால் என்ன லாபம் சொல்லுங்கள்? பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதையும், எளிதில் சீரமைக்கப்பட முடியாத அழிவுகளையும் தவிர்த்து வேறென்ன காணப்போகிறோம்? நான் இங்கே வந்திருப்பது ஹிட்லருக்குத் தெரியாது. தன்னிச்சையாகத்தான் வந்தேன். போரில் வெல்வதென்பது உங்களுக்குச் சாத்தியமே இல்லையென்ற நிலையில், சமாதானமாகப் போவதுதான் புத்திசாலித்தனமென்று அறிவுறுத்த வந்தேன். தவிர, ஹிட்லருக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமானது. ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக அவரோடு பழக்கம். அவருக்கு உண்மையில் இங்கிலாந்து மீது எவ்விதத் தப்பான எண்ணமுமில்லை.
What's Your Reaction?