ராகு - கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர்
திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், ராகு - கேது தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஈசன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், ராகு - கேது தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஈசன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றுள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 59-வது தலம் ஆகும். இத்தலத்தைப் போற்றி, அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடியுள்ளனர்.
ஒருசமயம் கைலாயத்தில் விநாயகப் பெருமான், சிவபெருமானை வணங்கிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்துக் கொண்டது. இதில் கோபமடைந்த சிவபெருமான், நாகர் இனம் முழுவதும் சக்தியை இழக்க சாபமிட்டார். அஷ்டமகா நாகங்கள், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களை தண்டிக்கக் கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டினர்.
What's Your Reaction?