கோள்கள் ஏன் கோள வடிவில் உள்ளன? | டிங்குவிடம் கேளுங்கள்
நல்ல கேள்வி. ஒரு கோள் ஈர்ப்பு விசையால்தான் கோள வடிவத்தை அடைகிறது. ஈர்ப்பு விசையால் ஒரு கோளின் அனைத்துப் பக்கங்களும் மையத்தை நோக்கி சமமாக இழுக்கப்படுகின்றன.

கோள்கள் ஏன் கோள வடிவில் இருக்கின்றன, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஸ்வரன், 5-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, திருமங்கலம், மதுரை.
நல்ல கேள்வி. ஒரு கோள் ஈர்ப்பு விசையால்தான் கோள வடிவத்தை அடைகிறது. ஈர்ப்பு விசையால் ஒரு கோளின் அனைத்துப் பக்கங்களும் மையத்தை நோக்கி சமமாக இழுக்கப்படுகின்றன. அதாவது, விளிம்புப்பகுதிகள் மையத்தை நோக்கி இழுக்கப்படும்போது, ஒட்டுமொத்த வடிவம் கோளமாக மாற்றப்படுகிறது. இது ஒரு முப்பரிமாண கோள வடிவம். நம் சூரிய மண்டலத்தில் 8 கோள்கள் இருக்கின்றன. இந்த எட்டுக் கோள்களும் ஒரே மாதிரி கோள வடிவில் இல்லை. அளவிலும் தூரத்திலும் இவை வேறுபடுகின்றன.
What's Your Reaction?