ஆர்வம் vs ஆசை பற்றிய புரிதல் உள்ளதா? | படிப்பும் வேலையும் - 1
உங்கள் மனம் எந்தப் பாடத்தைப் படிக்கும்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளது, எந்தப் படிப்பின் மீது உங்களுக்கு ஆழமானப் பிடிப்பு உள்ளது, எதை உங்கள் மனம் ஆழமாக விரும்புகிறது என்பதைக் கண்டறிந்து அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்.

சிறுவயதில் உங்கள் பெற்றோர், உறவினர், ஆசிரியர் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டிருக்கலாம் - ’வளர்ந்த பிறகு என்ன வேலைக்குப் போவாய்?’ இந்தக் கேள்விக்கு நீங்கள், ’மருத்துவர், அறிவியலாளர், விமான ஓட்டி’ என ஏதாவது ஒரு வேலையின் பெயரைக் கூறியிருப்பீர்கள். இதே கேள்வியை 12ஆம் வகுப்புக்குப் பின்பு உங்களிடம் கேட்கும்போது பலரால் உடனடியாகப் பதில் கூற முடிவதில்லை.
மனப்பாடம் வேண்டாம்: சிலரால் பதில் கூற முடிந்தாலும் சிறுவயதில் அவர்கள் கூறிய விருப்பத்திற்கு முற்றிலும் மாறாகப் புதிய வேலையைக் குறிப்பிட்டிருக்கலாம். அல்லது உங்களுக்கான வேலை என்ன என்பதே தெரியாமல் குழப்பமான நிலையில் இருக்கலாம். எந்த வேலைக்குச் செல்லப் போகிறோம்? அதற்கு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்தும் எந்தத் துறையில் உங்களுக்கு உண்மையான ஆர்வம் உள்ளது போன்ற விஷயங்கள் குறித்தும் எதுவுமே தெரியாமல் குழப்பமாக இருக்கலாம்.
What's Your Reaction?