புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர் பவனி | தி.மலை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் கார்த்திகை தீபத் திரு விழாவில் புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர் நேற்று பவனி வந்து அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர் வெள்ளிக்கிழமை பவனி வந்து அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெறும். காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த டிச.1-ம் தேதி விழா தொடங்கியது. மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனர். 63 நாயன்மார்கள், வெள்ளி தேரோட்டம் மற்றும் மகா தேரோட்டம் நடைபெற்றது.
What's Your Reaction?