அண்ணாமலையார் உற்சவராக எழுந்தருளி திருவீதி உலா | தி.மலை தீபத் திருவிழா சிறப்பு
நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பூதங்களில் நெருப்புக்கான தலமாக இருப்பது இந்த திருவண்ணாமலை தலமாகும். இத்தலத்துக்கு பெயர் பெற்ற இடைக்காட்டு சித்தர் உட்பட பல சித்தர்கள் இன்றும் இங்கு உறைவதாக நம்பும் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர்.

நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பூதங்களில் நெருப்புக்கான தலமாக இருப்பது இந்த திருவண்ணாமலை தலமாகும். இத்தலத்துக்கு பெயர் பெற்ற இடைக்காட்டு சித்தர் உட்பட பல சித்தர்கள் இன்றும் இங்கு உறைவதாக நம்பும் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். சித்தர்களை வணங்கும் முகமாக கிரிவலம்செல்பவர்கள் கையில் கொத்தாக ஊதுவத்திகளை ஏற்றி எடுத்துக்கொள்கின்றனர். அதன் மணம் மலையையே சுற்றி சூழ்கிறது. பெரும்பாலான பக்தர்கள் காலில் செருப்பு அணிவது இல்லை.
இங்கு உலவும் சித்தர்களின் மீது படும் காற்றானது தங்களது உடலில்பட்டால் தங்களது பல ஜென்ம பாவம் போய்விடும் என நம்புகிறார்கள் பக்தர்கள். எனவே, கிரிவலம் இங்கு மிகவும் பிரபலம். இம்மலைக்குள் இன்றும் ரிஷிகள் பல குழுக்களாக, பாறைகளின் அடியில் உள்ள குகைகளில் உலக நன்மையை வேண்டி யாகம் செய்துகொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
What's Your Reaction?