என்னால் நடிக்க முடியாது | தேன் மிட்டாய் 29
“உங்களால் ஏற்று நடிக்க முடியாத வேடம் என்று ஏதாவது இருக்கிறதா ஆட்ரி ஹெப்பர்ன்?” - இந்தக் கேள்வியை என்னை அறிந்தவர்கள் யாரும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். மறக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

“உங்களால் ஏற்று நடிக்க முடியாத வேடம் என்று ஏதாவது இருக்கிறதா ஆட்ரி ஹெப்பர்ன்?” - இந்தக் கேள்வியை என்னை அறிந்தவர்கள் யாரும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். மறக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். கடினமான பல கதாபாத்திரங்களில் என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னால் இறுதிவரை நடிக்கவே முடியாத ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய சிறுமியின் பாத்திரம். அதை நீதான் செய்ய வேண்டும் என்று நண்பர்களும் உன்னைவிடப் பொருத்தமானவர் இருக்க முடியாது
என்று தயாரிப்பாளர்களும் பேசிப் பார்த்து அலுத்துவிட்டார்கள். அவர்களை எல்லாம் விடுங்கள். உன் அளவுக்கு என் மகளை நெருக்கமாக அறிந்த இன்னொருவர் இருக்க முடியாது எனும்போது நீ ஏன் தயங்குகிறாய் என்று அவர் அப்பாவே என்னிடம் கேட்டிருக்கிறார். உண்மையில் தயக்கம்கூட இல்லை அது. அச்சம் என்றே தோன்றுகிறது. முதல் முதலாக ஆன் ஃபிராங்கின் டைரியைப் பிரித்துப் படித்த அந்தத் தருணத்தை நினைத்தால் இப்போதும் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.
What's Your Reaction?