44 நாட்களுக்குப் பிறகு பழநியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்
பழநியில் பராமரிப்பு பணிக்காக 44 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை புதன்கிழமை (நவ.20) காலை முதல்மீண்டும் தொடங்கியது.

பழநி: பழநியில் பராமரிப்பு பணிக்காக 44 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை புதன்கிழமை (நவ.20) காலை முதல் மீண்டும் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப் கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். வின்ச் ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்ளிலும் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் பயணிக்க அதிகளவில் பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக ஒரு நாளும், ஆண்டுக்கு 40 - 50 நாட்கள் வரையும் நிறுத்தப்படுகிறது.
What's Your Reaction?